'முதலில் அமரும் பறவை' - கனிவின் ததும்பலுக்குக் கவிதை என்று பெயர்
கல்யாணி.சி அவர்களிடம் இருக்கும் மூன்று கலைஞர்கள் அவரது படைப்புகளில் ஊடாடிக்கொண்டே இருப்பார்கள். கதை எழுதிக்கொண்டே இருப்பார் எழுத்தாளர். அந்த எழுத்தாளரிடம் கதைசொல்லியை மீறி ஓவியர் வெளிவந்து படித்துறையைக் காண்பார். படித்துறையைக் கண்டது வரை ஓவியர். பின்பு அதைப் படைப்பாக்குவது கவிஞராக இருக்கும். இந்த மூவரும் சேர்ந்து நம்மிடம் தரும் அனுபவங்களே அவரது கதைகளும் கவிதைகளும். பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு வண்ணதாசனை அறிமுகம் செய்து வைத்தவர் என்னுடைய அக்காவின் சம்பந்தி திருமதி.காந்தி அவர்கள். நாங்கள் தற்செயலாகப் புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது "வண்ணதாசன் கதையெல்லாம் கண்ணுக்கு முன்னாடியே நடக்குறாப்புல இருக்கும்" என்று சொன்னார். நீண்ட இடைவெளிக்குப் பின் இலக்கிய வாசிப்பின் பக்கம் வந்திருந்தேன். காந்தி அத்தாச்சியின் பரிந்துரையைக் கப்பெனப் பிடித்துக்கொண்டு புத்தகக் காட்சிகளில் வண்ணதாசன் நூல்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது, கல்யாண்ஜியும் அவரே என்று. நான் முதலில் படித்த, எனக்குப் பிடித்த கதை கனியான பின்னும் நுனியில் பூ. வாக...
