'முதலில் அமரும் பறவை' - கனிவின் ததும்பலுக்குக் கவிதை என்று பெயர்
கல்யாணி.சி அவர்களிடம் இருக்கும் மூன்று கலைஞர்கள் அவரது படைப்புகளில் ஊடாடிக்கொண்டே இருப்பார்கள். கதை எழுதிக்கொண்டே இருப்பார் எழுத்தாளர். அந்த எழுத்தாளரிடம் கதைசொல்லியை மீறி ஓவியர் வெளிவந்து படித்துறையைக் காண்பார். படித்துறையைக் கண்டது வரை ஓவியர். பின்பு அதைப் படைப்பாக்குவது கவிஞராக இருக்கும். இந்த மூவரும் சேர்ந்து நம்மிடம் தரும் அனுபவங்களே அவரது கதைகளும் கவிதைகளும்.
பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு வண்ணதாசனை அறிமுகம் செய்து வைத்தவர் என்னுடைய அக்காவின் சம்பந்தி திருமதி.காந்தி அவர்கள். நாங்கள் தற்செயலாகப் புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது "வண்ணதாசன் கதையெல்லாம் கண்ணுக்கு முன்னாடியே நடக்குறாப்புல இருக்கும்" என்று சொன்னார். நீண்ட இடைவெளிக்குப் பின் இலக்கிய வாசிப்பின் பக்கம் வந்திருந்தேன். காந்தி அத்தாச்சியின் பரிந்துரையைக் கப்பெனப் பிடித்துக்கொண்டு புத்தகக் காட்சிகளில் வண்ணதாசன் நூல்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது, கல்யாண்ஜியும் அவரே என்று. நான் முதலில் படித்த, எனக்குப் பிடித்த கதை கனியான பின்னும் நுனியில் பூ. வாகைப் பூவை, திரிச்சூர் பூரத் திருவிழாவின்போது யானை மேல் இருந்து வீசும் கவுரியோடு அவர் ஒப்பிட்டிருந்த முதல் பத்தியிலேயே பற்றிக்கொண்டது அவர் எழுத்தின் மீதான பிடிப்பு. அன்றிலிருந்து இன்றுவரை அவர் எழுத்துகள் இசைபோல, ஒரு நல்ல செவிக்குகந்த பாடல்போல இதமளித்தபடியிருக்கின்றன. இதோ இப்போது கல்யாண்ஜியின் 20வது கவிதைத் தொகுப்பான 'முதலில் அமரும் பறவை' நூலைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கை அடைந்ததின் வழியாக அல்ல, தேடலின் வழியாகவே தன்னை நீட்டித்துக் கொள்கிறது. நூலின் முதல் கவிதை இது. எத்தனையோ முறை அருவியில் குளித்தும் ஒரு மங்குஸ்தான் பழம் இதுவரை சாப்பிடவில்லை என்று சொல்லும் கவிஞர்,

"வாழ்க்கை என்பது
சாப்பிடாத ஒரு மங்குஸ்தான் பழம்"
சாப்பிடாத ஒரு மங்குஸ்தான் பழம்"
என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார். வாழ்க்கை என்பது அருவியில் குளித்தல் இல்லையா? இன்றினை மகிழ்வோம் என்று சொல்லிக்கொள்ளலாம். மனம் மகிழ்ந்து விடுகிறதா? எதனைப் பெறவில்லையோ அதன் தேடலில்தான் அடுத்த கணம் ஆரம்பமாகிறது. அது மங்குஸ்தான் பழமாக இருக்கலாம். வேறு எதுவாகவும் இருக்கலாம். இந்தக் கவிதை வாழ்க்கையைப் பார்த்து, "நீ எப்பவும் இப்படித்தான்" என்று வாய்க்காத வாய்ப்பை, இனி அது வாய்க்கலாம் எனும் எதிர்பார்ப்பின் வசீகரத்தைச் சொல்லிவிடுகிறது.
தத்துவமாக எதையும் கல்யாண்ஜி சொல்கிறாரா என்றால் இல்லை. ஆனால் எது உண்மையோ அது தத்துவமாகிறது. எது இயல்போ அது வாழ்வாகிறது. எது இயற்கையோ பூரணத்துவமாகிறது. உண்மையையும் இயல்பையும் இயற்கையையும் சரிகைப் பின்னல் போல கல்யாண்ஜியின் கவிதைகளில் மாறி மாறிப் பார்க்கலாம். ஆகவே அவரது கவிதைகள் தத்துவமாகிறது. வாழ்வாகிறது. பூரணமடைகிறது.
இந்தப் பலூன் கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள். மிகச் சாதாரணமாகத் தோன்றும். அது இருமையிலிருந்து ஒருமைக்குத் தாவும் ஒரு பரந்துபட்ட உணர்வின் உண்மையை நமக்கு அளிக்கிறது.

"என் பலூனை
இதற்கு மேல் ஊத முடியாது
வெடிப்பின் அபார கணத்திற்கு
மனம் தயாராகிவிட்டது"
வெடிப்பின் அ-பார கணம். பாரம் நீங்கிய விடுதலையின் கணம். அபாரம் என்று சிலாகிக்கக் கூடிய கணம். மிர்தாதின் புத்தகத்தில், "எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத சுதந்திரக் காற்றைப் போல் திகழுங்கள்" என்று சொல்வது போலொரு கணம்.
அன்றாடங்களை, இயற்கையை நாம் கண்டும் உணராதவற்றை கவிஞரின் விழிகள் காட்டித் தருகின்றன. அது அருவி, நதி, கடல், கூழாங்கல், மரம், சிற்பம், குழந்தை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் கைநழுவவிட்ட கணங்களின் காப்பகமாகக் கவிஞரின் விழிகள் இருக்கின்றன.
நம்முடைய மனநிலைக்கும் காட்சிக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. நம்முடைய உடல் நிலைக்கும் காட்சிக்குமே கூட. இந்தக் கவிதை அப்படிப்பட்டது.

"நீங்கள் வேறொரு பாரத்துடன் இருக்கையில்
அந்த நெட்டிலிங்க மரத்தைப் பார்க்கிறீர்கள்
மிக உயரமாக வளர்ந்திருக்கிறது
காற்றில் ஒரு பக்கமாகச் சாய்கிறது
முறிந்த சிறு மொரமொரப்புக் கூடக் கேட்கிறது"
அந்த நெட்டிலிங்க மரத்தைப் பார்க்கிறீர்கள்
மிக உயரமாக வளர்ந்திருக்கிறது
காற்றில் ஒரு பக்கமாகச் சாய்கிறது
முறிந்த சிறு மொரமொரப்புக் கூடக் கேட்கிறது"
எனச் எழுதுபவர் அந்த மரம் நம் மீது விழுந்தாலும் விழக்கூடும் என்று உட்கார்ந்த இடத்திலிருந்து நகர்ந்து உட்காரத் தீர்மானிப்பதை அடுத்துச் சொல்கிறார். அப்புறம்தான் தொடங்குகிறது காட்சியிலிருந்து பாரம் உதிரும் விந்தை.
"கூம்பிக் கிடக்கும் உச்சியிலிருந்து
இதுவரை பார்வையில் படாத
ஒரு சிறிய கரும்பறவை வெளிப்பட்டுப் பறக்கிறது
மரம் ஒரு புறமும் சாயவில்லை
எல்லாம் நேராகிவிட்டது
நீங்கள் தரையில் கிடக்கும்
நெட்டிலிங்க இலையைப் பார்க்கிறீர்கள்
அது வினோத நெளிவுடைய விளிம்புகளுடன்
ஒரு மவுத் ஆர்கன் வாத்தியம் போல் உள்ளது"
மரம் சாயவுமில்லை, முறியவுமில்லை. இருந்த இடத்தில் இருக்கிறது. நம் மனத்தில் இருக்கும் பாரம் மரத்தைச் சாய்த்துப் பார்க்கிறது. என்றாவது நாம் மன உளைச்சலில் இருக்கும் நாளில் படுக்கைக்கு மேல் இருக்கும் மின்விசிறி கீழே விழுந்துவிடுமோ என்று பயந்திருக்கிறீர்களா? அது போல இது. நம் பாரம் உச்சியில் இருக்கிறது. அதனை ஒரு நிகழ்வு மாற்றும்போது பாரம் தரையிறங்குகிறது. அப்போது நெட்டிலிங்க இலை மவுத் ஆர்கனாகத் தெரிவதில் வியப்பென்ன?
மவுத் ஆர்கன் போல இருக்கும் இலை என்ற உவமை போலவே அகவெளியில் ஒரு அனிமேஷன் படத்தை ஓட்டிப் பார்க்க வைக்கும் உவமை ஒன்றுண்டு இந்த நூலில். அது ஒரு வெயில் கவிதை. வெயிலைப் பற்றி எத்தனையோ கவிதைகள் எழுதியிருக்கிறார் கல்யாண்ஜி. இந்த நூலில் ஒரு வெயில் கவிதை. வெயில் பட்டபின் நிழல் விழுவது இயற்கை. இந்தக் கவிதை சொல்கிறது, வெயிலைவிட நிழல் தாமதமாக விழுகிறதாம். அதற்கு ஓர் உவமை சொல்கிறார் இப்படி:
"ஒரு தையற்காரர் அளவு எடுத்து

முடித்த பிறகு
தோளில் 'இஞ்ச் டேப்பை'ப்
போட்டுக்கொள்வது போல"
யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? இதனால்தான் கல்யாண்ஜி வளரும் தலைமுறை கொண்டாடும் கவிஞராக இருக்கிறார். இயற்கை தன் ஒவ்வொரு அணுவையும் புதுப்பித்துக் கொண்டே இருப்பது போல் கல்யாண்ஜியின் கவிதைகளும் புது வடிவத்தைப் பிரசவித்தபடியே இருக்கின்றன. நவீன, பின் நவீன, அதிபின் நவீன கவிஞர்களுக்கும் முன்னோடியாக அவர் எழுதியிருக்கும் கவிதைகள் பல.
"ரொம்பநேரம் தெப்பக்குளத்தில் குனிந்திருந்தவன்
நிமிர்ந்து கோபுரத்தைப் பார்க்கிறான்
கோபுரம் அலம்பி அலம்பி நெளிகிறது
பொம்மைகள் பச்சைக் குளத்தில் குதிக்கின்றன
உச்சிக் கலசத்திலிருந்து வானத்துக்கு எவ்வுகிறது
ஒரு உலோகப் புறா"
இந்தக் கவிதையைப் படித்தவுடன் என்னென்ன கற்பனைகள் வாசகனுக்கு உருவாகிறதோ அத்தனையும் தனித் தனிக் கவிதைகள். வாசகனுக்கான கற்பனையை விட்டுச் செல்லும் இத்தகைய கவிதைகள் கல்யாண்ஜியை இன்னும் ஏழு தலைமுறைக்குக் கொண்டு செல்லக்கூடியவை.
சில கவிதைகள் கல்யாண்ஜி கவிதை என்று பார்த்தவுடன் மனத்தில் பதிந்துவிடும். புதிய கவிஞர்கள் ஒவ்வொருவரும் கல்யாண்ஜி போலக் கவிதை செய்வதை முயன்று பார்க்கும்போது கல்யாண்ஜி கல்யாண்ஜியைப் போலவே எழுதாமல் இருக்க முடியுமா? அப்படியான கல்யாண்ஜியிஸக் கவிதைகள் என்றும் ரசனைக்குரியவை. அப்படி இந்த நூலில் உள்ள பல கவிதைகளில் இந்தக் கவிதை பழைய பாரம்பரிய வீட்டில் புழங்குவதற்கும் இன்றைய நவீன வீட்டில் புழங்குவதற்குமான ஒரு அடிப்படை வேறுபாட்டைப் பேசுகிறது.

"பிறந்து வளர்ந்த வீட்டுப் பட்டாசலில்
திரும்பிய சுவரில் எல்லாம் ஆணி
ஆணியடித்த காரைப் பொத்தல்கள்
இந்த வீட்டில் மருந்துக்குக் கூட
ஆணியைக் காணோம்
அலுத்துச் சலித்தால்
பின் எப்படி என்னை நான்
கழற்றித் தொங்கவிடுவது"
இந்தக் கவிதை ஊரிலிருந்து நகரத்துக்கு வந்து அல்லாடும் ஒருவரைப் பற்றிய காட்சியை நமக்குக் கொடுத்துவிடுகிறது.
கல்யாண்ஜிசியிஸத்திலும் ட்ரெண்டிங் ஆகப் போகும் கவிதைகள் பல இந்த நூலில் உள்ளன. சான்றாக ஒன்று. உண்மையில் பொங்கும் பிரவாகமும் நதியாடலும் உள்ளுக்குள் கலந்தடிக்கும் இதை வாசிக்கும்போது. பலூனின் வெடிப்பும் இந்தக் கவிதையின் பெயரிலியும் ஒன்றெனவே தோன்றுகிறது எனக்கு.
"பொங்கும் இந்தப் பிரவாகத்தில்
நான் இறங்கும்போது
என் பெயரைக் கேட்காதீர்கள்
இக்கணம் நான் பெயரிலி
அமிழ்ந்து திளைத்து
அலையாடிக் கிறங்கும்போது
நதியின் பெயரைக் கேட்காதீர்கள்
அக்கணம் அது பெயரிலி"
'கல்யாண்ஜி கவிதைகளில் பறவைகள்' என்று ஒரு தனி ஆய்வே செய்யலாம். அத்தனை பறவைக் கவிதைகளை எழுதியிருக்கிறார் இதுவரை. இந்த நூலில் தான் கல்லாகிவிட்டால் எந்தப் பறவை முதலில் வந்து அமரும்? எனக் கேட்கிறார்.
"உச்ச மழை நாளில்
உதிர்ந்து கிடக்கும்
பன்னீர் பூக்கள் பார்த்தபடி
நிற்கும் இதே நிலையில்
நான் கல்லாகிவிட்டால்
நாளை அதிகாலை
எந்தப் பறவை வந்து முதலில் அமரும்?"
கல்லாவதா? கல்லாய்ச் சமையும் தியானம் அது. ததும்பிப் பெருகும் கனிவு அது. அப்போது பன்னீர்ப் பூக்களுக்கு இறகு முளைக்கும். பட்டாம்பூச்சிகள் மழையாகும். இதுதான் முதலில் அமர வேண்டும் என்று எந்த பேதமும் இல்லாத அவரை, சிறகுலர்த்தும் கவிதையொன்று இன்னொரு கவிதைக்குத் தட்டியெழுப்பும். அந்தக் கவிதையை எழுதப் போகும் மார்க்கண்டேயக் கவிஞரை வாழ்த்துகிறேன்.
ஃஃஃ

Comments
Post a Comment